Breaking News

'நயன்தாரா - விக்னேஷ் சிவன்' ஜோடியை சீண்டும் சிம்பு..? அடியாத்தி மறுபடியுமா..?


தனது முன்னாள் காதலி, நடிகை நயன்தாரா, இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில், அவர்களை சீண்டுவது போன்ற ஒரு வசனத்தால் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகர் சிம்பு.

பேச்சை மதிக்காத ரசிகர்கள்..! படாதபாடு பட்ட சிம்பு..!  

'சிம்பு முன்பு போல இல்லை, படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருகிறார், சமூக அக்கறையுடன் இருக்கிறார். நாயகிகளுடன் கிசு கிசுக்களில் சிக்குவதில்லை' என ரசிகர்கள் அவரை பற்றி புகழ்ந்து தள்ளிவரும் நிலையில், இவற்றை பொய்யாக்குவது போன்று போல இடம் பெற்று இருக்கிறது 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்பட வசனம் ஒன்று.


சுந்தர் C இயக்கத்தில் உருவாகியுள்ள, வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் படியான வசனங்களை பேசி நடித்திருக்கிறார் நடிகர் சிம்பு.


'எனக்கா ரெட்கார்டு திருப்பி பாரு ரெக்கார்டு'  உள்ளிட்ட பல வசனங்கள் பலரை நமக்கு நினைவுபடுத்தியிருக்கும் நிலையில், 'உங்க காதலி வேற யாரையோ கல்யாணம் பண்ண போறாங்க' என்ற கேள்விக்கு, 'எங்க போனாலும் கடைசில என்கிட்ட வந்துருவாங்க' என அவர் பேசி இருக்கும் வசனம் நயன்தாராவை குறிப்பிடுவது போல இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"விஸ்வாசம் - பேட்ட' பட பேனர்களை கிழிப்போம்" சிம்பு ரசிகர்கள் பகிரங்க மிரட்டல்