Breaking News

"ரஜினி-அஜித்' ரசிகர்களுக்கு மிரட்டல்..! பரபரப்பை கிளப்பும் சிம்பு ரசிகர்கள்


சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வழக்கமான சிம்பு படங்கள் போல, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆர்வத்திலும் சிக்கல் எழுந்திருந்த நிலையில்,

'படம் ரிலீஸ் ஆகாவிட்டால், திரையரங்குகளில் ஓடும் பிற திரைப்படங்களின் பேனர்களை கிழிப்போம்' என ஆர்வக்கோளாறு சிம்பு ரசிகர்கள் சிலர், மிரட்டல் விடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


குறிப்பிட்ட வீடியோவில் பேசும், சிம்பு ரசிகர்கள் அவரை விமர்சிப்பவர்களையும், கிண்டல் செய்பவர்களையும் திட்டும் பாணியில் பேசியிருந்தனர்.

சிம்பு ராஜாவாக வந்தும், கம்பீரமாக நிற்கும் தல; தாக்கு பிடிக்காத தலைவர்

மேலும், தியேட்டர் ஓனர்கள் பலர், 'விஸ்வாசம்-பேட்ட' திரைப்படங்கள் ஓடுவதால் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தினை திரையிட முடியாது என மறுத்ததாகவும், அப்படி திரையிடவில்லையென்றால், சிம்பு ரசிகர்கள் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஓடும் பிற படங்களின் பேனர்களை கிழிக்குமாறும் சர்ச்சையான வேண்டுகோள் வைத்திருந்தனர்.


இந்த சர்ச்சையான வீடியோவினால், பேட்டையா..? விஸ்வாசமா..? என ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிருந்த ரஜினி, அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து, ஆர்வக்கோளாறு சிம்பு ரசிகர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பேச்சை மதிக்காத ரசிகர்கள்..! படாதபாடு பட்ட சிம்பு..!