Breaking News

'ரஜினி-அஜித்' ரசிகர்கள் மன்னிச்சிருங்க...! சிம்பு பாணியில் பல்டி அடித்த ரசிகர்


விஸ்வாசம், பேட்ட பட பேனர்களை கிழிப்போம் என்று அஜித், ரஜினி ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த சிம்பு ரசிகர், அடுத்த நாளே மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

"ரஜினி-அஜித்' ரசிகர்களுக்கு மிரட்டல்..! பரபரப்பை கிளப்பும் சிம்பு ரசிகர்கள்

சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகியான மச்சி மதன் எனும் நபர், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், திரையரங்குகளில் ஓடும் பேட்ட, விஸ்வாசம் திரைப்பட பேனர்கள் கிழிக்கப்படும் என சவால் விட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.


இதற்கு ரஜினி, அஜித் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, நடிகர் சிம்பு, பால் அண்டா விவகாரத்தில் மாற்றி பேசியதை போலவே, 'தான் சொல்லவந்ததை ரஜினி-அஜித் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும்,

தனது கருத்து எவரையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுமாறும் கோரி, அந்தர் பல்டி வீடியோ ஒன்றினை வெளியிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.

தலைவன் எவ்வழியோ, ரசிகனும் அவ்வழியே...!