Breaking News

"காதலுக்கு மறுப்பு" தூக்கில் தொங்கிய இளம் சீரியல் நடிகை


சீரியல் நடிக, நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள், சின்னத்திரையுலகில் தொடர் கதையாகி வருகிறது.

இந்த விரும்பத்தகாத, சம்பவங்களின் தொடர்ச்சியாக, 21 வயதேயான இளம் சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டு, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

'நாக ஜான்சி' எனும் குறிப்பிட்ட சீரியல் நடிகை, 'பவித்ர பந்தம்' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். ஹைதராபாத்தில் ஸ்ரீநகர் காலனியில் வசித்துவந்த இவர், சூர்யா எனும் தொழிலதிபரை காதலித்து வந்துள்ளார்.


இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவரவே, ஜான்சியை கண்டித்ததாக தெரிகிறது. பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக, அவர் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், டிவி சீரியலில் நடிப்பதை கூட தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஜான்சி, தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையில், ஜான்சி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, காதலர் சூர்யாவுடன் மணிக்கணக்கில் போனில் பேசி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.  

மேலும் இது கொலையாக இருக்கலாமா..? எனும் கோணத்திலும் விசாரித்து வரும் ஹைதராபாத் போலீசார், பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்