Wednesday, 6 February 2019

பணம் வந்ததும் மாறிட்டீங்களா...? ரசிகர்களின் விமர்சனத்தில் செந்தில்கணேஷ்


நாட்டுப்புற பாடகரும், பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றியாளருமான செந்தில்கணேஷ், ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

சினிமா பாடல்களை தவிர்த்து நாட்டுப்புற பாடல்களை பாடியது, எத்தனையோ உடை இருந்தும் பாரம்பரிய உடையான வேஷ்டியில் தோன்றியது என, மண் மீதான தனது மரியாதையினால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செந்தில்கணேஷ்.


இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் மரியாதையும் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல உடை தயாரிப்பு நிறுவன விளம்பரத்தில் அவர் நடித்திருந்தது சர்ச்சைக்கு ஆளானது.

அதற்கு, 'நளிந்த நெசவாளர்களுக்கு, தான் வென்ற போட்டி தொகையில் ஒருபகுதியின் மூலம் உதவுவேன்' என கூறிவிட்டு, தனியார் நிறுவன பொருட்களை விளம்பரப்படுத்தியது காரணமாக கூறப்பட்டது.

இது போதாதென்று இப்பொழுது, டிவி நிகழ்ச்சிகளில் வந்தால் வேஷ்டியில் தான் வருவேன் என பேசிவிட்டு, தற்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கோட் சூட் என படுமாடர்னாக வந்திருக்கிறீர்கள் எனக்கூறியும் சமூகவலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();