Breaking News

அடியாத்தி சாய்பல்லவியா இது..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்


ரௌடி பேபி பாடலில் தனது அற்புதமான நடனத்தின் மூலமாக, உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருப்பவர் நடிகை சாய்பல்லவி. இப்படி பல்வேறு தரப்பு ரசிகர்களை 'வாவ்' சொல்ல வைத்திருக்கும், இவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.



ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு, சினிமா நடிகை ஆவதற்கான சிறு சாயல் கூட இல்லாமல், அவர் தோன்றி இருக்கும் அந்த புகைப்படத்தினை பிரபல யூட்யூப் சேனல் காண்பித்து சாய்பல்லவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தது.


குறிப்பிட்ட புகைப்படம் குறித்து பேசி இருந்த சாய்பல்லவி, 'அது மேடை பயத்தினை போக்கும் வகுப்பிற்கு சென்றபோது எடுத்த ஒன்று' என தனது குழந்தை பருவ அனுபவங்களை பகிர்ந்தார். 

"நயன் இல்ல, நீ தான்மா ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..!" நடிகையை கொண்டாடும் திரையுலகம்

நாயகிகளிலேயே மிக தனித்துவமாக, தனது ரசிகர்கள் தன்னை ரசிக்கும் பாணியிலேயே, மேக்கப் தவிர்த்து நடித்து வரும் சாய்பல்லவியின் குழந்தை பருவ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.