Breaking News

'WWE' பாணியில் நடிகர் செய்த காரியம்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


தங்களை பற்றி சமூக வலைதளமெங்கும் ரசிகர்கள் பேச, ஒரு சில நடிகர்கள் இன்று எதை செய்யவேண்டுமானாலும் தயாராக இருக்கின்றனர். அப்படி, பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் செய்த காரியம், ரசிகர்களை காயப்படுத்திய நிலையில், அவருக்கே விபரீதமாக முடிந்திருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வருபவர், ரன்வீர் சிங். எப்பொழுதும், ஏதாவதொரு குறும்புத்தனம் செய்து தலைப்புச்செய்தியில் இடம்பெற்றுவிடும் இவர், சமீபத்தில் ரசிகர்கள் கூடி இருந்த இடத்தில்  மேடையில் இருந்து, அவர்கள் மீது 'WWE' சண்டைகளில் இடம்பெறுவது போல குதித்துவிட்டார்.

நடிகரின் இந்த செயலை எதிர்பாராத ரசிகர்கள், அவரை தாங்கிப்பிடிக்க தவறவே, பலத்த காயம் அடைந்தனர். இத்தகைய செய்கை, ஹாலிவுட்டில் பாடகர்களிடையே வழக்கம். என்றாலும் குதிப்பதற்கு முன்பு, ரசிகர்களின் அனுமதியை கேட்டுவிட்டு, அவர்கள் தயாரான பின்பு தான் குதிப்பார்கள்.

ஆனால், முன்னறிவிப்பின்றி ரசிகர்களின் மீது விழுந்து, ரன்வீர் சிங் ரசிகர்களை காயப்படுத்திய விவகாரம், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
தொடரும் 'கேலி - கிண்டல்கள்'.... சிம்புவின் புதிய சபதம்