Wednesday, 13 February 2019

'என்னது திருமணமா..?' தெறித்து ஓடும் செண்பா


'ராஜா ராணி' தொடரின் மூலம் பிரபலமான, ஏன் காதலில் விழுந்த ஜோடியான ஆல்யா மானசா, சஞ்சீவ் தங்களது திருமண முடிவு குறித்து மனம் திறந்துள்ளனர்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் ஒரு ஜோடியை பிடித்து விட்டால், அவர்களை நிஜ வாழ்விலும் ஜோடியாக்கி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வந்துவிடும்.

அப்படி ரசிகர்களினாலேயே தனது பழைய காதலை தொலைத்து, நடிகர் சஞ்சீவ் உடன் நிஜவாழ்வில் காதலில் விழுந்தார் ஆல்யா. தற்பொழுது இவர்கள் தீவிரமாக காதலித்து வரும் நிலையில், 'இருவருக்கும் திருமணம் எப்பொழுது?' என்ற கேள்வியானது, இவர்கள் சந்திக்கும் வழக்கமான ஒரு கேள்வியாகி இருக்கிறது.

இது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த ஆல்யா, இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்க வில்லை. ஒரு நடிகையாக நான் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன். அதன் பிறகுதான் திருமணம் என ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் பதிலளித்து இருந்தார். 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();