Breaking News

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.? ராய் லக்ஸ்மியை கலங்கடித்த சம்பவம்


திரைத்துறையில் இன்று இலவச விளம்பரமாக இருந்து வருகிறது வதந்திகள். மார்க்கெட் டல்லடித்து விட்டால் பெரும்பாலான நாயகிகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே கிளப்பி விடும் சம்பவங்களும் நிறைய உண்டு.

அதே சமயம், அவர்களின் மார்க்கெட்டுக்கே உலைவைக்கும் அளவிற்கு வெளிவரும் வதந்திகளால் கொந்தளித்து போய் விடுவர் நம் பிரபலங்கள். அப்படி தன்னை கதிகலங்க செய்த ஒரு வதந்தி குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை ராய் லக்ஸ்மி.

அவர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'வேர் இஸ் வெங்கட லக்ஸ்மி' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தன்னை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்தார்.

அப்பொழுது, 'வீண் வதந்திகளை பரப்புவதையே ஒரு சில தங்களது முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். எனக்கு ஒரு சில காதல் முறிவுகள் இருந்துள்ளது அதற்காக உங்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு முறை படப்பிடிப்பில் நான் மாங்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இதனை பார்த்த எவரோ, நான் திருமணமே ஆகாத நிலையிலும் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி கிளப்ப துவங்கிவிட்டனர்.

அந்த வதந்தியை தடுத்து நிறுத்த நான், நீதிமன்றத்துக்கே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.' என வதந்திகளால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசினார்.