Breaking News

'ஆஸ்கார் விருதை தட்டி சென்ற முதல் 'இந்திய ஆவணப்படம்' - பொழியிது பாராட்டு மழை


'பீரியட் எண்டு ஆப் சென்டன்சஸ்' என்கிற மாதவிடாய் காலங்களில்  இந்திய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஆவணப்படம், திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்காரை தட்டி சென்றுள்ளது.

'மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீட்டு, அவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது' என்பது போல பல கட்டுப்பாடுகள் விதித்து, அவர்களை தீண்ட தகாதவர்களை போல நடத்தும் பழக்கம் இந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது. 

இதனை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி, இந்திய மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகி இருந்தது, 'பீரியட் எண்டு ஆப் சென்டன்சஸ்' என்கிற ஆவண குறும்படம்.

இகுறும்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்காரையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

உலக சினிமாவின் அங்கீகாரமான ஆஸ்கார் விருதுகளின், 91 வது விழா இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிறந்த ஆவண குறும்படங்கள் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட  'பீரியட் எண்டு ஆப் சென்டன்சஸ்' இறுதியில் ஆஸ்கர் விருதையும் பெற்றது.

இந்நிலையில் இதனை படைத்த, ஈரானிய அமெரிக்க இயக்குனரான ரைகா ஜெஹ்தாசிப்பிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.