Breaking News

உஷாரய்யா உஷாரு!!! இனி தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்தால் '3 ஆண்டுகள்' சிறை...!


ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் தலைவலியாக விளங்கி வரும் பைரசிக்கு எதிராக ஒரு புதிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள், புதிய திரைப்படங்கள் ரிலீசான அன்றே, அவற்றை சட்டவிரோதமாக வெளியிட்டு வருவதை தலைகீழாக நின்றும் திரைத்துறையினரால் தடுக்க முடியவில்லை.

விஷால் உள்ளிட்ட பல திரையுலகினரும், இந்த விஷயத்தில் அரசின் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொண்டும் இருந்தனர்.  

மேலும், இவ்வகை இணையதளங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை குறைக்கும் விதத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையையும் பல ஆண்டுகளாக முன்னிறுத்தி வந்தனர்.


இதன் பலனாக கடந்த புதன் கிழமை அன்று, தொழிற்சங்க அமைச்சரவை திரைப்பட சட்டம் 1952ல் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன் படி, பைரஸி இணையதளங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்லாது, அவற்றில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கும் மக்களுக்கும் தண்டனை கிடைக்கலாம் என தெரிகிறது.

அதாவது, இனி தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி இணையதளங்கள் மற்றும் திருட்டு டிவிடிகளில் படம் பார்ப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறையோ, அல்லது 10 லட்சம் அபராதமோ விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு, திரைத்துறையினர் தங்களது வரவேற்பை தெரிவித்து வரும் நிலையில், பைரசியை முழுவதும் ஒழிக்க, நல்ல படங்கள் கொடுப்பதை விட சிறந்த வழி வேறெதுவும் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.