Breaking News

'திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால்'... நயன்தாரா போட்ட கண்டிஷன்


திரையுலகில் இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடக்கலாம், என எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜோடி, நயன்தாரா விக்னேஷ் சிவன்.

என்னதான் இவர்களது திருமணம் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இப்போதைக்கு திருமணம் இல்லை என்ற தனது விடாப்பிடி முடிவால் அவற்றை பொய்யாகி இருக்கிறார் நயன்.

இது குறித்து சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி, லேடி சூப்பர் ஸ்டார் என உச்சம் தொட்டுவிட்ட நயன்தாரா, தனக்கு இருக்கும் மார்க்கெட்டினை இழக்க விரும்பவில்லையாம்.

இதனால் திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டி வரும் அவர், 100 படங்களில் நடிப்பது என்ற தனது இலக்கினை எட்டிவிட்டே திருமணம் என்ற புதிய கண்டிஷன் ஒன்றினையும் விதித்திருப்பதும் தெரியவந்துள்ளது.    

இதுவரை 63 படங்களில் நடித்திருக்கும் நயன், தனது 100 இலக்கினை எட்ட குறைந்தது 4 வருடங்கள் ஆகும் எனும் நிலையில், 'என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்போம்' என ஆர்வமாக காத்திருக்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.