Friday, 8 February 2019

குவியும் பாராட்டுக்கள்... குதூகலத்தில் நயன்தாரா


லக்ஸ்மி, மா போன்ற சர்ச்சை குறும்படங்களை இயக்கிய சர்ஜுனின் இயக்கத்தில், KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐரா.

இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த திரைப்படத்தின் 'மேகதூதம்' எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ, சமீபத்தில் வெளியாகி இருந்தது.


அதில் நயனின், பவானி எனும் கதாபாத்திரத்தின் தோற்றம் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை கண்டு பலரும் தங்களது வியப்பை தெரிவித்து வந்தனர்.

இத்தனை நாட்கள், 'கிராமத்து பெண், மாடர்ன் பெண்' என எந்த வேடத்தில் தோன்றியிருந்தாலும் அழகு பதுமையாகவே இருக்கும் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், முதன் முறையாக; அப்பாவியாக, அடர் நிற தோற்றத்தில், ரசிக்க முடியாத முகபாவனைகளுடன் இந்த பவானி கதாப்பாத்திரத்தின் வாயிலாக கண்டனர்.


இதனை கண்டு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கூட, நயன்தாராவை போன்று தோற்றமளிக்கும் பெண்ணை நடிக்க வைத்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இப்படி சிறிதும் எதிர்பாராத, தனது மாறுபட்ட தோற்றம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை கண்டு நயன்தாரா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், படம் ரிலீசானால் கண்டிப்பாக இக்கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும், ஏன் விருதுகள் கூட கிடைக்கலாம் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();