Breaking News

இனிமே நோ லிப் கிஸ்... 'ஸ்ரீ ரெட்டி' நாயகன் போட்ட கண்டிஷன்


நடிகை ஸ்ரீ ரெட்டி ஒருபுறம், அவர் என்னுடன் உறவு வைத்தார், மது அருந்தினார் என போட்டுத்தாக்கி கொண்டு இருக்க, வழிய வரும் முத்த காட்சிகளை வேண்டாமென மறுத்து வருகிறார் நடிகர் நானி.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வந்து வரும் இவர், தன் படங்களில் முத்தக்காட்சிகளே இருக்க கூடாது என பல வருடங்களாக கண்டிஷன் போட்டு வருகிறாராம். 

'ஆஹா கல்யாணம்' திரைப்படத்தில் நடிகை வாணி கபூருடன் முத்தக்காட்சியில் நடித்திருந்தார் நானி. இதனை திரையில் பார்த்த அவரது மனைவி, மன வருத்தமடைந்து கண்ணீர் விட்டதே அவரது இந்த முடிவிற்கு காரணம் என்கின்றன தெலுங்கு சினிமா வட்டாரங்கள்.