தொடர் மிரட்டல்..! அரசியல்வாதிகளால் அடங்கிப்போன இசையமைப்பாளர்
அதே நேரம், அரசியல் ஆசை துளிர்விடும் நடிகர்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாவதையும் நாம் பார்க்க முடியும்.
இப்படி, அரசியல்ஆசை இல்லாவிட்டாலும், தனது புரட்சிகரமான இசையின் மூலம் தமிழக இளைஞர்களை, அரசியல் அநீதிகளுக்கு எதிராக எழச்செய்த இசையமைப்பாளர் ஒருவர், அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து இருக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
குறிப்பிட்ட இளம் இசையமைப்பாளர் வெளியிட்ட பாடல், அரசியல்வாதிகளை கதிகலங்க செய்ததையடுத்து, பலரது மிரட்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர், 'தான் உண்டு, தன் இசையமைப்பு உண்டு' என இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வரும் இவர், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் தனது பாடல்கள் அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்து வருகிறாராம்.