Breaking News

அடுத்தடுத்து வெளியான ஆபாச புகைப்படங்கள்...! அதிர்ச்சியில் மேகா ஆகாஷ்


இளம் நடிகை, மேகா ஆகாஷின் சமூக வலைதளப்பக்கத்தில்; அடுத்தடுத்து ஆபாச புகைப்படங்கள் பதிவிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனுஸுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா',  சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ்.

சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் இவரது, இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து வெளிநாட்டு பெண்களின் ஆபாச புகைப்படங்கள் வெளியானது.


இதனால் ரசிகர்களும் குழம்பி போய் இருந்த சமயத்தில், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த பக்கத்தை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு விளக்கி இருந்தார்.


இது போன்று சினிமா பிரபலங்களின் சமூக வலைத்தளபக்கங்கள் ஹேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல, சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் கணக்கு திருடப்பட்டு அதில் அவரது அந்தரங்க புகைப்படங்களே வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.