Wednesday, 6 February 2019

குட்டி சொர்ணாக்காவின் "சினிமா ஆசை" நிறைவேற்றி வைப்பாரா தளபதி..?


சமூக வலைத்தளங்களின் விஸ்வரூப வளர்ச்சி, திறமைசாலிகள் தங்களை வெளிக்காட்டி கொள்ள மிகப்பெரும் உதவியாக அமைந்து விட்டது. இதன் மூலம், திறமைசாலிகள் மட்டுமல்லாது, தனித்துவ குணாதிசயங்கள் கொண்டவர்களும் தற்பொழுது பிரபலமடைய துவங்கி இருக்கின்றனர்.

அப்படி தனது அடாவடி பேச்சால், ஒட்டுமொத்த தமிழர்களை திரும்பி பார்க்க வைத்திருந்தார் இளம்பெண் ஒருவர். வளர்ச்சிதை நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிறுமியை போல இருப்பதால், நெட்டிசன்களால் 'குட்டி சொர்ணாக்கா' என்று பரவலாக அழைக்கப்பட்டு வந்தார்.


இப்படி, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களை ஊடங்கள் விரட்டி சென்று நேர்காணல் எடுப்பதுவாடிக்கையாகிவரும் நிலையில், குட்டி சொர்ணாக்கவும் தற்பொழுது யூட்யூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், தனது பெயர் ஜெயலலிதா, இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், வயது 18 போன்ற விவரங்களை தெரிவித்திருந்த அவர், சினிமாவில் நடிப்பது குறித்த தனது கனவை பற்றியும் கூறி இருந்தார்.

தனக்கு நடிகர் விஜயின் படத்தில் நடிக்க வேண்டும், அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இப்பொழுதே தயார் என தனக்கே உரிய அடாவடிதனத்தோடு பேசி இருக்கிறார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();