Breaking News

'நெருக்கம் காட்டி ஏமாற்றிய நடிகர்கள்' - காஜல் எடுத்த அதிரடி அவதாரம்


திறமைக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை விட, நட்புக்கும் நெருக்கத்திற்கும் கிடைக்கும் படவாய்ப்புகளே திரைத்துறையில் அதிகம்.

இதனை நன்கு புரிந்து வைத்திருக்கும் நாயகிகள், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாயகர்கள் இயக்குனர்களுடன் வழியப்போய் நட்பு பாராட்டி வருகின்றனர்.

அப்படி, தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வந்தவர் காஜல் அகர்வால். ஆனால் வழக்கம் போல, அந்த நாயகர்கள் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் பக்கம் தாவ, படவாய்ப்புகள் பாதாளத்திற்கு சென்று விட்டது.

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவர், போதிய படவாய்ப்புகள் இல்லாத நிலையில், 'இப்படியே போனால் சரிப்பட்டு வராது' என, படத்தயாரிப்பில் ஈடுபட தயாராகி வருகிறாராம்.

சென்ற வருடம், அவர் நடித்து வெளியான 'அவே' திரைப்பட இயக்குனரான பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தை, 'கா புரொடக்சன்ஸ்' எனும் பெயரில் அவர் தயாரிக்க இருப்பதாக திரைத்துறையில் ஒரு தகவல் வலம்வருகிறது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை 

'போலி புகைப்படம்' ரசிகர்களை ஏமாற்றிய அனுஸ்கா.! உண்மை தோற்றம் வெளியானதால் அதிர்ச்சி