Breaking News

'சினிமாவே வேண்டாம்'... விக்ரம் மகன் துருவ் எடுத்த விபரீத முடிவு


சினிமா வேண்டாம் என கூறும் அளவிற்கு விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டாராம் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

பாலா இயக்கத்தில், தெலுங்கு திரையுலகின் மாபெரும் வெற்றி படமான அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான, வர்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்க இருந்தார் துருவ்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை, மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்த அவரது முதல் படமே சரியாக வரவில்லை எனக்கூறி 'E4 எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனத்தால்  கைவிடப்பது.   


தயாரிப்பாளர், இயக்குனருக்கு இடையே நடந்த ஈகோ பிரச்சனையால் தனது முதல் படமே கைவிடப்பட்டது துருவிக்கிற்கு பேரிடியாக இறங்கியது. மேலும் ராசியில்லாத நடிகர் என கோலிவுட் வட்டாரத்தில் தனக்கு கிடைத்த பெயரால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்ட அவர்,

'சினிமாவே வேண்டாம். நான் அமெரிக்காவுக்கே சென்று மேற்படிப்பினை தொடருகிறேன்' என்ற அதிர்ச்சிகர முடிவெடுத்து விட்டதாகவும், தந்தை விக்ரமின் அறிவுரையினை ஏற்றே மீண்டும் வர்மா படத்தின் மறு படப்பிடிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கின்றன அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள்.