Tuesday, 5 February 2019

தெலுங்கு ரசிகர்களை தெறித்து ஓட வைத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து'


தமிழ் இளம் ரசிகர்களிடையே , 'அடல்ட் காமெடி' வகை திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பினை உலகறிய செய்த திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

என்னதான் ஒருபுறம் மக்கள், இயக்குனரையும் படக்குழுவினரையும் கழுவி ஊற்றினாலும், கொட்டோ கொட்டென்று கொட்டிய வசூலால், 'பல்லு படமா பாத்துக்க, இடுப்புக்கு கீழ ரெண்டு இன்ச்'  என அடுத்தடுத்து உருவாகி வருகின்றன, நேரடி அர்த்த ஆபாச திரைப்படங்கள்.


இது ஒரு புறம் இருக்க, தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

தமிழை மிஞ்சும் அளவிற்கு, ஆபாசம் நிறைந்தது தெலுங்கு வெர்சனான 'சிக்கடி கடிலோ சித்தா கோட்டுடு' என பேசவைக்கும் அளவிற்கு படு கில்மாவாக இருக்கும் ட்ரைலரை கண்டு தெலுங்கு திரையுலகே மிரள, 'இதோ வந்துட்டோம்ல' என்று யூட்யூபை நோக்கி தெறித்து ஓட துவங்கியுள்ளனர் தெலுங்கு ரசிகர்கள்.

விளைவு ஒரே நாளில் சுமார் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து, பட்டையை கிளப்பி வருகிறது 'சிக்கடி கடிலோ சித்தா கோட்டுடு' டிரைலர்.

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();