Breaking News

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..? தந்தை வழியில் ஆத்விக்


நடிகர் அஜித், ஒரு நடிகராக மட்டும் நின்றுவிடாமல் கார், பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல் போன்ற பிற துறைகளிலும் அசத்தியவர்.

இவருக்கு கார், பைக் மீது இருக்கும் பிரியத்தினை அவரது பிரமாண்ட கலெக்சன்ஸ் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒருபுறம் தந்தை விலையுயர்ந்த கார்,பைக்குகளை வாங்கி குவிக்க, அவரது மகன் ஆத்விகோ பொம்மை கார்களை வாங்கி குவித்து வருகிறார்.


சமீபத்தில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றிற்கு அம்மா ஷாலினியுடன் வந்திருந்த ஆத்விக், பொம்மை கார் கேட்டு அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஆர்வம் தொடர்ந்தால், அஜித்தை போலவே ஆத்விக்கும் கார்பந்தய வீரர் ஆவர் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து, தனது தந்தை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பிகளுக்கு அழகாக போஸ் கொடுத்த ஆத்விக், தந்தையை போலவே நெட்டிசன்களிடம் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார்.