Breaking News

"ஜன்னல் வச்ச நைட்டி" கிண்டலுக்கு ஆளான ஏமி ஜாக்சனின் உடை


பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஏமி ஜாக்சன் அணிந்து வந்த வித்யாச உடை கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற 'லாக்மே ஃபேஷன் வீக்' நிகழ்ச்சியில் வித்யாசமான மாடர்ன் உடை அணிந்து தோன்றி இருந்தார் நடிகை ஏமி ஜாக்சன்.

இந்திய திரையுலகை அடுத்து, ஹாலிவுட்டிலும் தடம் பாதிக்கும் நோக்கில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பலரது பார்வையும் அவர் பக்கம் திரும்பி இருந்தது.

குறிப்பிட்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ஏமி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கருப்பு நிற பளபள உடையில், நெஞ்சு பகுதியில் மட்டும் ஜன்னல் வைத்தது போல் இருந்த அந்த உடையை, ஏமியின் அமெரிக்க ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினாலும், இந்திய ரசிகர்களோ, கிண்டல் செய்யும் பாணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.