Breaking News

'தன்னம்பிக்கையம் அடையாளம் இவர்'... பள்ளி புத்தகத்தில் 'தல அஜித்'


நடிகர் அஜித் பற்றிய  சிறு பகுதி, பள்ளிப்பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சினிமா பின்னணி ஏதுமின்றி, திரைத்துறையில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித். இந்த இடத்தை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

இப்படி பல தடைகளை கடந்து, நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் தன்னம்பிக்கை குறித்த சிறு பகுதி, 6ம் வகுப்பு CBSE பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

என்னுடைய உத்வேகம் எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட பாட குறிப்பில், மெக்கானிக்காக பணிபுரிந்து, 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிலிம் பேர் விருதுகளை குவித்தது குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.