Breaking News

ஓயாத தல அஜித்... தக்சாவை தொடர்ந்து புதிய அத்யாயம்..!


சினிமா மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி வரும் நடிகர் அஜித், சென்னை எம்ஐடி'ன் மாணவர்களுடன் ஆலோசகராக, இணைந்து ஏர் ஆம்புலன்ஸினை உருவாக்கி பலரது பாராட்டுகளை பெற்றார்.

சிறிது காலமே அப்பணியில் இருந்தாலும், 'தங்கள் மாணவர்களை சாதனை படைக்க செய்த, அஜித் அவர்கள் விரும்பினால், எப்பொழுது வேண்டுமானாலும்  மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்' என்ற அனுமதியையும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு அளித்து கௌரவித்தது.

இது ஒருபுறம் இருக்க, தற்பொழுது தனது அடுத்த அத்தியாயமாக துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ஏற்கனவே, கார் ரேஸிங், ஏரோநாட்டிக்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் கலக்கிவிட்ட அஜித், துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்க வாழ்த்துக்கள்.