Wednesday, 6 February 2019

நேரடி நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் செய்த சேட்டை... விவரம் பத்தாத தொகுப்பாளினி


இசை சேனல்களில், ரசிகர்களுடன் இளம் தொகுப்பாளினிகள் உரையாடுவதும், பின்னர் அவர்கள் விருப்ப பாடல்களை ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மிகப் பிரபலம்.

அப்படியொரு, பிரபல டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியின் போது, அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்பட பாடலை ஒளிபரப்ப கோரிய ரசிகர் ஒருவர், நாசுக்காக தொகுப்பாளினியையும் கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

குறிப்பிட்ட ரசிகரோடு பேசிய தொகுப்பாளினி, 'உங்களுக்கு யாரை போல ஆகவேண்டும் என்று ஆசை...?' என கேள்வி எழுப்ப, நான் நடிகர் ஜானி சின்ஸ்ஸை போல ஆக விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.


மேலும் எதற்கு அவரை போல ஆக விரும்புகிறீர்கள் என தொகுப்பாளினி வினவ, அவர் விரும்பி நடிக்கிறார் என்று பதிலளித்து சென்றார் ரசிகர். இந்த பதில்களுக்கு விவரம் தெரியாமல் தொகுப்பாளினி இயல்பாக ரியாக்ட் செய்ததுதான் இதில், ஹைலைட்டே.

'இந்த பதிலில் என்ன சேட்டை இருக்கிறது? இயல்பாகத்தானே பேசி இருக்கிறார்' என்று கூறுபவர்களுக்கு ஒரு தகவல், அந்த 'ஜானி சின்ஸ்' பிரபல ஆபாச திரைப்பட நடிகர். 

  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();