Breaking News

அஜித்தை புகழ்ந்து பேசிய வயதானவர்..! கொடூரமாக தாக்கிய விஜய் ரசிகர்கள்


விஜய்,அஜித் ரசிகர்களுக்கிடையேயான சண்டை, நவீன தலைமுறையினரின் ஆரோக்கியமற்ற செய்கைகளில் ஒன்று. ஒருவரின் படங்களை மற்றொருவர் கேலி கிண்டல் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாது, வெட்டு, குத்து ஏன் சில சமயங்களில் கொலையில் கூட முடிந்திருக்கிறது இந்த வீண் சண்டை.

இதன் தொடர்ச்சியாக, அஜித்தை புகழ்ந்து பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக, விஜய் ரசிகர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கிறார்  வயதானவர் ஒருவர். 

ஜான்சன் எனும் குறிப்பிட்ட நபர், தான் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசும் வீடியோக்களால் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபலமடைந்தவர். 'தன் வாழ்க்கையில் அஜித் எப்படி ஒளி ஏற்றினார்' என்பதை, தனியார் தொலைக்காட்சியில் கூட தெரிவித்து இருந்தார் அவர்.

இந்நிலையில் இவரை அண்மையில் சந்தித்த விஜய் ரசிகர்கள் சிலர், 'அஜித்தை மட்டும் தான் புகழ்ந்து பேசுவியா, விஜய் பற்றியும் பேசு' என மிரட்டியதோடு மட்டுமல்லாது, கொடூரமாக தாக்கியதாகவும் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.