Breaking News

இந்திய நடிகைக்கு பாலியல் மிரட்டல்... பாகிஸ்தான் தீவிரவாதிகளின் வேலையா?


பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான கருத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்திய சின்னத்திரை நாயகி மர்ம நபர்களினால் பாலியல் மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.

சில்பா ஷிண்டே எனும் குறிப்பிட்ட நடிகை, டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். இவர் அண்மையில் நிகழ்ந்தேறிய புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் சித்து தெரிவித்த 'தீவிரவாதிகளுக்கு நாடே கிடையாது' என்ற கருத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த அவரை, 'கற்பழித்து விடுவேன்' என மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த மிரட்டல்களுக்கு தான் சட்ட ரீதியாக பதிலடி கொடுக்க இருக்கும் தகவலையும் அவர் வெளியிட்டார்.