Friday, 8 February 2019

கவர்ச்சி காட்டினாலும் குத்தம்...! இழுத்து போர்த்தினாலும் குத்தமா..? கஸ்தூரி காட்டம்


#FreedomToChoose #

  ஆஸ்கார் நாயகன் A.R ரஹ்மானின் மகள், கதிஜா; மேடையில் ஹிஜாப் உடையில் தோன்றி இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

'பிள்ளைகளுக்கு முழு சுதந்திரமும் தான் அளித்திருப்பதாக சொல்லிவிட்டு, மேடையில் இந்த உடையில்தான் தோன்றவேண்டும் என ரஹ்மான் கட்டாயப்படுத்தி இருக்கிறார்' என சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்ய துவங்கினர் இணைய போராளிகள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 'Freedom to Choose' (என் உடை என் விருப்பம்) எனும் ஹேஸ்டேக் வாயிலாக, ரஹ்மானின் மகள் கதிஜா, தான் கட்டாயப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.


இந்த கருத்திற்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர், ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் இது குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அதில், 'பாடகர் SPB அவர்கள், பாடகிகள் மேடை விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தோன்றுவது குறித்து விமர்சித்த போது, 'என் உடை என் விருப்பம்' என பொங்கி எழுந்தவர்கள், இழுத்துப் போர்த்திக் கொண்டு ஒரு பெண் தோன்றியிருப்பதும், அவருடைய விருப்பம் என்பதை புரிந்துகொள்ள மறுப்பது ஏன்' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.     


இப்படிப்பட்ட கவர்ச்சி காட்டினாலும் குத்தம், இழுத்து போர்த்தினாலும் குத்தம் என எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் கும்பல்களுக்கு மத்தியில், நம் மனம் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பதே சால சிறந்தது.      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();