Breaking News

என் முதலிவில் நடந்ததை சொல்லட்டுமா...? வைரலாகும் '90ml' திரைப்பட காட்சி


ஓவியா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் 90ml. குடி கும்மாளம் என முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்திற்க்கு எதிரான காட்சிகளால் நிரம்பி வழிந்த இத்திரைப்பட ட்ரைலருக்கு மிகுந்த எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த சர்ச்சைகளுக்கு, இதெல்லாம் சாதாரணம் இதுக்கு போய் பிரச்னை செய்கிறீர்களே என ஓவியா மற்றும் படக்குழுவினர் பதிலளிக்க கொந்தளித்தனர் சமூக அக்கறை கொண்ட ரசிகர்கள்.

இதனால் ஏற்பட்ட சலசலப்பே அடங்காத நிலையில், மீண்டுமொரு சர்ச்சை காட்சியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது அப்படக்குழு.

குறிப்பிட்ட காட்சியில், தன் முதலிரவில் நடந்த விஷயங்களை ஓவியா உட்பட பிற தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஒருவர். விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்த காட்சிக்கு, வழக்கம் போல, எதிர்ப்புகளும் ஆதரவுகளை குவிந்து வருகிறது.