Breaking News

கவர்ச்சி குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த்..! கடைசில இப்படி இறங்கிட்டாரே


கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'கழுகு', இதன் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளிவர தயாராகி இருக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் "சகலகலா வள்ளி" எனும் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. யுவனின் இசையில் உருவாகி கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என கொண்டாடப்பட்டு வரும் இந்த பாடலில், பிக்பாஸ் பிரபல யாஷிகா ஆனந்த் கவர்ச்சி நடனமாடி இருக்கிறார்.



பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பின்பு வேற லெவலில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த யாஷிகா, கவர்ச்சி நடனமாடி இருப்பது ஒரு புறம் வருத்தத்தை அளித்து இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பே இந்த படப்பிடிப்புகள் நடைபெற்று விட்டதை கேள்விபட்டு ஆறுதல் அடைந்து இருக்கின்றனர்.


ஆமாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்திய நிகழ்வுகளுக்கு முன்னாலேயே கழுகு-2 படத்தில் ஒப்பந்தமாகி இருந்தாராம் யாஷிகா.