Breaking News

விஸ்வாசம் திரையரங்கில் "வெட்டுக்குத்து" தெறித்து ஓடிய ரசிகர்கள்


'விஸ்வாசம்' திரைப்பட திரையரங்கில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு கத்திக்குதில் முடிந்த விபரீதம் நிகழ்ந்தேறியுள்ளது.

தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாபெரும் பிரமாண்ட திரைப்படம் விஸ்வாசம். அஜித், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே முதல் நாள் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

இதனால் அவ்வப்போது கைகலப்பு சம்பவங்கள் நிகழுவதும் வழக்கம். ஆனால் வேலூரில் உள்ள அலங்கார் தியேட்டரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரு வாலிபர்கள் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு போராடி வருகின்றனர்.

சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராரே இந்த விபரீதத்திற்கு காரணமாக அமைந்து இருக்கிறது. மேலும் உயிருக்கு போராடி வரும் அந்த இளைஞர்கள் வேலூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் ரமேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தினால், சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட விஸ்வாசம் திரைப்பட காட்சிரத்து செய்யப்பட்டது. மேலும் இரு வாலிபர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நான்கு பேரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.