Breaking News

"விஸ்வாசம் Vs பேட்ட" எது பெஸ்ட்...? இது ரசிகர்களின் விமர்சனம்


Viswasam vs Petta public opinion  

தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் விஸ்வாசம், பேட்ட எனும் இரு பிரமாண்ட திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளது. என்னதான் விஜய், அஜித், ரஜினி என்று மாபெரும் நடிகர்கள் நடித்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'தியேட்டர்கள் 'ஈ' ஓட்ட வேண்டியதுதான்' என தமிழ் சினிமா ரசிகர்கள் எப்பொழுதோ உணர்த்திவிட்டனர்.

அந்த வகையில் விஸ்வாசம், பேட்ட திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் கூறிய விமர்சனம் இதோ.

விஸ்வாசம்:


அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' திரைப்படத்திற்கு பிறகு, கிராமத்து பின்னணியில் விஸ்வாசம் உருவாகி இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி; அழகான காதல் காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், கண்ணீர் வரவழைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் என கட்டிப்போட்டு இருக்கிறது விஸ்வாசம்.

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அஜித் ஒரு ஜாலியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அஜித் காமெடி செய்யும் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. 

இண்டெர்வலில் இடம் பெரும் சண்டை காட்சி வேற லெவல். இரண்டாம் பாதியில் இடம் பெரும் எமோஷனல் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைத்திடும். மொத்தத்தில் விஸ்வாசம் கடந்த 10 வருடங்களில் வெளியான தல அஜித்தின் படங்களிலேயே சிறப்பான ஒன்று.  

பேட்ட:


ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் பழைய சூப்பர்ஸ்டாராக, ஸ்டைலா கெத்தா ரஜினி தோன்றி இருக்கும் பேட்ட, அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாதான்.

ரஜினியின் தீவிர ரசிகர் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் என்பதனாலோ என்னமோ, ரசிகர்கள் பார்க்க விரும்பிய படி ரஜினியை படம் முழுவதும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். 

அனிருத்தின் இசை, ரஜினி தோன்றும் காட்சிகளை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதியின் வில்லனிசம் வேற லெவல். ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும், கரகோஷத்தால் திரையரங்குகளை நிலம் நடுங்க செய்கிறது.

மொத்தத்தில் பழைய எபிக் ரஜினியாக சூப்பர் ஸ்டார்ட் தோன்றி இருக்கும் பேட்ட ஒரு தரமான சம்பவம். 

ஆக மொத்தம் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களுமே நேர்மறை விமர்சனங்களை பெற்று வருவதால், ரசிகர்களின் பர்ஸ் காலியாக போவது மட்டும் நிச்சயம்.