Breaking News

'விஸ்வாசம்' பார்க்க காளை மாட்டோடு வந்த ரசிகர்... வயிறு குலுங்க சிரிக்க வைத்த சம்பவம்


விவசாய குடும்பங்களை சேர்ந்த தமிழர்கள்,  மாடுகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுபவர்கள். தங்கள் வீட்டு பிள்ளைகளின் சந்ததி கார்ப்பரேட் காரர்களால் அழிவதை, ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களோடு இணைந்து போராடி தடுத்தவர்கள்.

இப்படி, என்னதான் தங்களுக்கு நெருக்கமான ஒரு ஜீவனாக மாடுகள் இருந்தாலும், 'இதெல்லாம் ரொம்ப ஓவர்' என கேட்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது மதுரையில் நடந்த ஒரு சம்பவம்.


உலகம் முழுவதும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிவரும்  நிலையில், மக்கள் குடும்பம் குடும்பமாக அப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

அவர்களை போல தானும், தன் குடும்பத்தாராக நினைத்த காளைமாட்டினை, விஸ்வாசம் திரைப்படம் பார்க்க மாட்டுப்பொங்கல் அன்று, மதுரையில் உள்ள மாயாண்டி திரையரங்குக்கு அழைத்து வந்திருக்கிறார் ரசிகர் ஒருவர். இதனை பார்த்து மிரண்டு போன, தியேட்டர் அதிகாரிகள் அவரை படாத பாடுபட்டு திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர்.