Breaking News

விஸ்வாசத்திற்கு வரலாறு காணாத வரவேற்பு..! தியேட்டரை நோக்கி படையெடுக்கும் குடும்பங்கள்


அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்திற்கு ஃபேமிலி  ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெரும்பாலும் நடிகர் அஜித்தின் சமீபத்திய படங்கள், அனைத்து தரப்பினரும் பார்க்கும் படங்களாக இருந்ததில்லை. இதனால் குடும்பத்தோடு வந்து படம்பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அவர் படங்களுக்கு மிகக் குறைவாக இருந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம், நடிகர் அஜித்தால் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படத்தையும் கொடுக்க முடியும் என காட்டி இருக்கிறது.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது, இரு அர்த்த வார்த்தைகள் என எந்த வித முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இல்லாமல் இத்திரைப்படம் உருவாகி இருப்பதே இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் ஒன்றாக மாற்றி இருக்கிறது.