Breaking News

என்னது மாபெரும் வெற்றியா...? விநியோகஸ்தர்களை புலம்பவிட்ட விஸ்வாசம்


அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ள நிலையில், பிற மாநிலங்களின் ஒரு சில இடங்களில் நஷ்டத்தையும் சந்தித்துள்ள அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நான்காவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். குடும்பங்கள் கொண்டாடும் ஒன்றாக இப்படம் உருவாகி இருக்கும் நிலையில், விஸ்வாசத்திற்கு தமிழகத்தில் ஏகோபோக வரவேற்பு.


இதனால் வசூலும், விநியோகஸ்தர்கள் போட்ட முதலை தாண்டி தற்பொழுது லாபம் கொடுத்து வருகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும்பாலானோர் மிகுந்து மகிழ்ச்சியில் இருந்து வரும் நிலையில், ஒரு சிலரோ மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர்.



அதாவது, கேரளா மற்றும் அமெரிக்காவில் விஸ்வாசம் திரைப்படம் நஷ்டத்தை கொடுத்து இருப்பதாக ஒரு தகவல் வலம்வருகிறது. விஸ்வாசம் திரைப்பட விநியோக உரிமையானது, கேரளாவில் 4.5 கோடி மதிப்புடைய நிலையிலும், விவேகம் நஸ்டத்தை ஈடுகட்ட 2.5 கோடிக்கு விற்பனையாகி இருந்த நிலையில், வெறும்  1.2 கோடி அளவிலேயே வசூல் செய்துள்ளதாம்.



மேலும் அமெரிக்காவில் வீசிய பேட்ட சூறாவளியால், 30 லட்சம் ரூபாய் வரை விஸ்வாசம் நஷ்டத்தை கொடுக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் விஸ்வாசத்தை கொண்டாடி வரும் நிலையில், இவ்விரு பகுதியை சேர்ந்த விநியோகஸ்தர்கள் மட்டும் நஷ்டத்தை எண்ணி புலம்பி வருகின்றனர்.