Breaking News

விஸ்வாச விபரீதம்...! ராட்சத கட் அவுட் சாய்ந்து ரசிகர்கள் படுகாயம்..! வீடியோ உள்ளே


உலகம் முழுவதும் இன்று நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இந்த தினத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

துரதிஷ்டவசமாக இந்த கொண்டாட்டங்கள் எல்லை மீறியதால் பல இடங்களில் விபத்துக்களும், சண்டைகளும் நிகழ்ந்து சோகமான தருணங்களாக மாறி இருக்கிறன.

கட் அவுட் சாய்ந்து ரசிகர்கள் படுகாயம்:


திருக்கோயிலூரை சேர்ந்த திரையரங்கம் ஒன்றில், கட் அவுட் சாய்ந்ததில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். 

அஜித், விஜய், ரஜினி என ரசிகர் படையை கொண்ட நடிகர்களின் படங்களுக்கு, பிரமாண்ட கட்டவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்வது ரசிகர்களின் வழக்கம்.

இந்த நடைமுறையினால் அவ்வப்போது விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையிலும் இது தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகிறது.

இந்நிலையில், திருக்கோயிலூரை சேர்ந்த திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த, அஜித்தின் 50 அடி கட்டவுட்டில் 10க்கும் மேலான ரசிகர்கள் ஏறி பாலாபிஷேகம் செய்தனர்.

இதனால் எடை தாங்காது அந்த கட் அவுட் சாய்ந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.  




இந்த சம்பவம் மட்டுமல்லாது, வேலூரில் அஜித் ரசிகர்கள் கத்தி குத்து, படம் பார்க்க பணம் தராதா தந்தையை பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்ற மகன் என வன்முறை சம்பவங்களும் இன்று தமிழகத்தை ஆட்டிப் படைத்தது வருகின்றன.