பிரமாண்ட வெற்றிக்கு பின்னரும் "அஜித்" சிம்பிளா சொன்ன அந்த வார்த்தை..!
அஜித்தை அடிமட்டத்துக்கு சென்று வெறுப்பவர்கள் எனக்கூறப்படும் விஜய் ரசிகர்களே படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் அளித்து வருகிறார்கள்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பம் குட்டிகளோடு, விஸ்வாசம் திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான தியாகராஜன் அவர்கள், இந்த மாபெரும் வெற்றி குறித்து அஜித் சொன்ன வார்த்தை பற்றி பேசி இருக்கிறார்.
அதில், அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு குறித்து போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதற்கு அவர், "எல்லாம் கடவுளின் கையில்" என பதில் அளித்ததாக கூறி பாராட்டி இருந்தார்.