Breaking News

"விஸ்வாசம்" உருவாக காரணமான அந்த ஒரு சம்பவம்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்


பொங்கலுக்கு "பேட்டையா..? விஸ்வாசமா...?" என சினிமா ரசிகர்கள் குழம்பி போய் இருக்கும் வேளையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்க வைக்கும் விதத்தில் வெளியாகி இருக்கிறது விஸ்வாசம் குறித்த சுவாரஸ்யமான தகவல்.

நடிகர் அஜித், தனது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் அலாதியான  அன்பு நாம் அறிந்ததே. என்னதான் பிரமாண்ட நடிகராக இருந்தாலும் ஒரு தந்தையாக அவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்த ஒன்று.

அப்படி தனது மகள் அனோஸ்காவின் பள்ளி விளையாட்டு போட்டியில் "மாபெரும் கார், பைக் ரேசர்" என பெயர் எடுத்த அஜித், டயர் ஓட்டி தோல்வி அடைந்தார். அந்த சுவாரஸ்ய சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


என்னதான் அந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும், தன் வாழ்வின்  அற்புத தருணமாகவே அதனை கூறி மகிழ்ந்து வந்தாராம் அஜித்.

படப்பிடிப்பிலும் இது குறித்து அவர் அடிக்கடி பேசவே, குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் அந்த அன்பை கருவாக வைத்து விஸ்வாசம் கதையை இயக்குனர் சிவா உருவாக்கியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் அனிகா, நயன்தாரா இடம் பெரும் காட்சிகளை அனோஸ்கா, ஷாலினியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.