Breaking News

ரஜினி வீட்டையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்...! கோபத்தில் ரஜினி ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் தங்கள் திரைப்பட விளம்பரங்களுக்கு போஸ்டர் அடிப்பதற்கென ஒரு பெரிய தொகை ஒதுக்கப்படுவது உண்டு. இப்படி லட்சக்கணக்கில் செலவு வைக்கும் இந்த போஸ்டர் செலவீனங்கள் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படங்களுக்கு இல்லை.

ஏனென்றால், "நீ பெருசா? நான் பெருசா?" எனும்  விஜய் அஜித் ரசிகர்களுக்கிடையேயான போட்டியியல் தங்கள் கைக்காசை போட்டு, 100 - 200 அடிகள் என பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டும் பணிகளை ரசிகர்களே பார்த்துக் கொள்வர்.

மாறாக இம்முறை, நடிகர் அஜித்தின் |விஸ்வாசம்" திரைப்படம், சூப்பர் ஸ்டாரின் "பேட்ட" உடன் மோதவே ஒற்றுமையாக இருந்த இவ்விரு ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆர்வக்கோளாறான இருதரப்பு ரசிகர்களில் சிலர், ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொள்ளும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்தேறி வருகிறது.

இந்த சண்டை ஒருபுறம் இருக்க, அஜித் ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினி வீட்டின் நுழைவுக்கு  முன்னாள் விஸ்வாசம் திரைப்பட போஸ்டர்களை ஒட்டி இருக்கின்றனர்.


அதன் புகைப்படங்களையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் சிலர் அஜித் ரசிகர்களின் இந்த செயலுக்கு தங்களது அதிருப்தியினை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள் 

ரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..! வைரலாகும் வீடியோ