Breaking News

'சர்க்கார்' வசூலை 'விஸ்வாசம்' நெருங்க கூட முடியாது...! அடித்து சொல்லும் சினிமா வட்டாரங்கள்

visvasam-first-day-collection

தல அஜித் நடிப்பில், ஜனவரி 10ம் தேதி ரிலீசாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தினால் நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்பட வசூலை நெருங்க கூட முடியாது என கிசு கிசுக்கிறது சினிமா வட்டாரங்கள்.

சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் சுமார் '100 கோடி' பட்ஜெட்டில் விஸ்வாசம் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையரங்க உரிமை மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் உட்பட மொத்த விற்பனை '117 கோடி' ரூபாய் என தெரியவந்துள்ளது.

visvasam-first-day-collection


இதன் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 17 கோடி ரூபாய் லாபம் ஈட்டி கொடுத்துள்ளது இத்திரைப்படம். மேலும் ரிலீஸை ஒட்டி விடுமுறை தினங்கள் நிறைய இருப்பதால் மிகப் பெரும் லாபத்தை 'விஸ்வாசம்' ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

என்றாலும் நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம், முதல் நாளிலேயே தமிழகத்தில் வசூல் செய்த 32 கோடி எனும் மாபெரும் தொகையை விஸ்வாசம் எட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.

visvasam-first-day-collection

ஏனென்றால், சர்கார் திரைப்படம் போட்டிக்கு பெரிய திரைப்படங்கள் ஏதும் இன்றி தனியே ரிலீஸ் ஆகி இருந்ததால், அதிக தியேட்டர்கள் கிடைத்து இந்த வசூல் சாதனை நிகழ்த்த முடிந்தது.

visvasam-first-day-collection

ஆனால் விஸ்வாசத்துடன், பேட்ட எனும் பிரமாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சர்கார் சாதனையை முறியடிக்கும் விஸ்வாச ரசிகர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கி இருக்கிறது.   

#viswasam-first-day-collection