Breaking News

சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த பிரபல தமிழ் நடிகை


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உதவியாளராகவும், தோழியாகவும் இருந்தவர் சசிகலா.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நிகழ்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் தற்பொழுது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


இந்நிலையில் இவரது ஆதரவு கோரி சிறை சென்று நேரில் சந்தித்து இருக்கிறார், முன்னாள் தமிழ் திரைப்பட நடிகை விஜயசாந்தி. போலீஸ் வேடங்களுக்கு பெயர் போனவரான இவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக தினகரன் அவர்கள் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, விஜய் சாந்தி; அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.