Tuesday, 8 January 2019

இதென்ன சீமானுக்கு வந்த சோதனை..? வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்


பிரபல அரசியல்வாதியும், தமிழ் சினிமா இயக்குனருமான சீமான் தற்பொழுது விஜய் ரசிகர்களின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

முன்னதாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயை தாறுமாறாக கலாய்த்து இருந்தார் சீமான். சர்க்கார் படத்திற்கு அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விஜய் சந்தித்ததை கேலி செய்திருந்த அவர், சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தெரிவித்து, நடிகர் விஜயை மட்டம் தட்டுவது போல பேசி இருந்தார்.


சீமானின் இந்த சர்ச்சை பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சீமானுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ள விஜய் ரசிகர்கள், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.   

ட்விட்டர் வலைத்தளத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விஜய் ரசிகர்களின் பதிவுகள் சீமானுக்கு எதிராக சுற்றித் திரிகின்றன  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();