Breaking News

ரசிகர்களின் தொடர் அன்பு தொல்லை...! ஆந்திரா பக்கம் போகும் விஜய்


விஜய், அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும், தளபதி 63 படப்பிடிப்புகளை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் மவுசு நாம் அறிந்ததே. அவர்களுக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களது பேவரைட் பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்புக்காக தவம் கிடந்து வருகின்றனர்.

இதனால் இவர்களது படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகள் பற்றிய தகவல் கிடைத்துவிட்டால், ரசிகர்கள் அலைகடலென திறந்துவிடுவதும் அதனால் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்படுவதும் வழக்கமான ஒன்று.

இப்படி சமீபத்தில் நடிகர் விஜயின் 63 வது படப்பிடிப்புகள், சென்னை பின்னி மில்லில் நடைபெறும் தகவலை அறிந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூட, படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது.


இதே நிலை மீண்டும் தொடரலாம், என்கிற அச்சம் தளபதி 63 படக்குழுவினரை தோற்றுக்கொண்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்தலாமா' என அப்படக்குழு விவாதித்து வருவதாக, ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இப்படிபட்ட, ரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க, அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் தங்கள் பட படப்பிடிப்புகளை வேறு மாநிலங்களில் நடத்துவது வழக்கம். இப்படி ரசிகர்களின் இடையூறுகள் தொடர்ந்தால், நடிகர் விஜயும் அவர்களது பாணியை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார் என புலம்புகிறது, தமிழ் திரையுலகம்.