'மீண்டும் முருங்கை மரம் ஏறிய சிம்பு' பாதியிலேயே நிற்கும் படப்பிடிப்பு
இப்படி இருக்க 'நான் திருந்திவிட்டேன், ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு வருவேன் என பேசிவிட்டு, சொன்னதுபோலவே இயக்குனர் மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தை நடித்து முடித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார்.
தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' எனும் திரைப்படத்திலும் நடித்துவந்த அவர், வேதாளம் முருங்கை மரம் ஏறியக்கதையாக மீண்டும் படப்பிடிப்புக்களுக்கு டிமிக்கி கொடுக்க துவங்கி இருக்கிறாராம்.
இத்திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், மீதமிருக்கும் பாடல் காட்சிகளுக்கும், பிற சொச்ச காட்சிகளிலும் நடித்துக் கொடுப்பதில் குடைச்சல் கொடுத்து வருகிறாராம் சிம்பு.
இதனால் சுந்தர் சி தரப்பு மிகுந்த அதிருப்ப்தியில் இருந்துவரும் நிலையில், சம்பள பாக்கி இருக்கும் காரணத்தினாலேயே சிம்பு இத்தகைய இடையூறுகளை செய்வதாகவும் கிசு கிசுக்கிறது சினிமா வட்டாரங்கள்.