Sunday, 13 January 2019

"விஸ்வாசம்" கொண்டாட்டங்களை ஓரம் கட்டிய "தளபதி 63"..! மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்


கடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீசான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய், அட்லீ இணையும் 'தளபதி 63' படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட், விஸ்வாசம் கொண்டாட்டங்களை தாண்டி டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


 'தளபதி 63' படத்தில் பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ், கதிர் இணைந்துள்ள குறிப்பிட்ட தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட, அத்திரைப்படம் குறித்த பதிவுகளால் ட்விட்டர் நிரம்பி வழிய துவங்கியிருக்கிறது.


கடந்த 14 மணி நேரங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் 'தளபதி 63' ஹேஸ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

அட்லீயுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்திருக்கும் இந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத்தில், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாராம் தளபதி விஜய். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();