Breaking News

"தளபதி 63" படமும் காப்பியா..? மீண்டும் சிக்கலில் அட்லீ


இயக்குனர் அட்லீயும் கதை திருட்டு சர்ச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்டியாதவை.  அவர் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் முதல், மெர்சல் வக முரை அனைத்திலும் பழைய ஹிட் திரைப்படங்களின் பாணி தென்பட்டதே இந்த கதை திருட்டு சர்ச்சைகளுக்கு காரணம்.

இப்படி இருக்க அவர் இயக்க இருக்கும் நடிகர் விஜயின் 63வது திரைப்படத்தின் கதை தன்னுடையது என படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே குண்டை தூக்கி போட்டிருக்கிறார் குறும்பட இயக்குனர் ஒருவர்.

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் திரைப்படங்களுக்கு பிறகு விஜய்  நடிக்கும் தளபதி 63 திரைப்பட படப்பிடிப்புகள் வருகிற ஜனவரி 18ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.



பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி உருவாக இருக்கும் இருக்கும் இத்திரைப்படத்திற்காக 16 கால்பந்தாட்ட வீராங்கனைகள்  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்த நிலையில், இயக்குனர் அட்லீயை தொடர்பு கொண்ட குறும்பட இயக்குனர் ஒருவர், 'தளபதி 63, திரைப்பட கதை தன்னுடைய கதை போல உள்ளதாக' கூறி விளக்கம் கேட்டிருக்கிறார்.


அவர் கூறியதை போல 'தளபதி 63' பட கதையும், குறும்பட இயக்குனரின் கதையை ஒத்து இருந்ததை கண்டு மிரண்டு போன அட்லீ, பிரச்சனைகளை தவிர்க்க அந்த இயக்குனர் உடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம்.