Breaking News

கை கொடுக்காத வெற்றி படங்கள்..! கலக்கத்தில் கியூட் நடிகை


தற்பொழுது திரையுலகில் நிலைப்பதற்கு நடிப்பு திறமையோடு கொஞ்சம் அதிஷ்டமும் தேவைப்படுகிறது. அந்த அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட இல்லாமல் தவித்து வருகிறார் இளம் நடிகை ஒருவர்.

கயல் கண்களுக்கு சொந்தக்காரியான அந்த கியூட் நடிகை, நடித்தது எல்லாம் சிறு சிறு படங்கள் தான் என்றாலும் அனைத்திலும் அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

அவர் இறுதியாக நடித்த சிறிய பட்ஜெட் படமும் மாபெரும் வெற்றி பெற்று அதிகம் பேசப்பட்டது. ஆனால் புகழ் எல்லாம் நாயகனை சென்றடைய மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் நடிகை.


என்றாலும் ஒரு மேல்தட்டு நடிகருடனாவது நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடாதா..? என்ற நம்பிக்கையில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தார்அவர்.

அந்த காத்திருப்பும் வீணாய் போகவே, வேறு வழியில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் இரண்டாவது நாயகி வாய்ப்பு கிடைத்தாலும் பரவாயில்லை என, தேடிப் போய் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.