Breaking News

கவர்ச்சி குத்தாட்டத்துக்கு இறங்கியது ஏன்..? தமன்னா சமாளிப்பு


ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகையாக வலம்வந்தவர் தமன்னா. தற்பொழுது நிறைய இளம் நடிகைகள்  வருகையாலும், சம்பள கெடுபிடிகள் காரணமாகவும் சொச்ச படங்களிலேயே நடித்து வருகிறார்.

தற்பொழுது அப்படி கிடைத்த நடுத்தர நடிகர்களின்  பட வாய்ப்புகளும் வெகுவாக குறைந்து வருவதால், ஓரிரு பாடல்களுக்கு ஆடி செல்லும் கவர்ச்சி கன்னியாக வலம்வர துவங்கி இருக்கிறார்.


இறுதியாக கன்னட நடிகர் யாஷ் உடைய, KGF திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். இது குறித்த தொடர் கேள்விகளுக்கு அண்மையில் தமன்னா பதில் அளித்து இருக்கிறார்.

அதில், 'தனக்கு நடனம் நெருக்கமான ஒன்று' எனவும், 'நாயகியாக நடிக்கும் திரைப்படங்களில் நடனமாட பெரும்பாலும் வாய்ப்பு அமைவதில்லை' என்றும், 'அதனாலேயே இந்த கவர்ச்சி குத்தாட்ட அவதாரம்' என சமாளிக்கும் விதத்தில் பதில் அளித்து இருந்தார்.