Breaking News

நடிகர் சூர்யாவை துரத்தும் மிருக செண்டிமெண்ட்...!



தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, மிருகத்தின் பெயரில் உருவான 'சிங்கம் சீரிஸ்' திரைப்படங்களை தொடர்ந்து 'யானை' எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தை அடுத்து சூர்யாவின் நடிப்பில் 'NGK', காப்பான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த திரைப்படங்கள் இந்த ஆண்டிற்குள் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ஹரியின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா.

இந்த ஜோடி இணைந்து கொடுத்த, சிங்கம் சீரிஸ் திரைப்படங்கள் சூர்யாவிற்கு திரையுலகில் மைல்கல்லாக அமைந்தது. அந்த திரைப்பட பாணியில், அதிரடியான திரைப்படமாக 'யானை' உருவாக இருக்கிறது. இதனை பல வருடங்களுக்கு பிறகு, பெருமை மிகு AVM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.