Breaking News

'ஸ்ரீதேவி' மரணத்தை விளம்பரமாக்கிய திரைப்படம்... சர்ச்சைக்குன்னே படம் எடுப்பாய்ங்களோ..?


'ஒரு ஆதார் லவ்' படத்தின் ஒரே பாடலில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். தனது கண்ணசைவில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்திழுத்த இவர், ஸ்ரீ தேவியின் மரண சர்ச்சைகளை மீண்டும் தூசி தட்டுவது போன்ற படத்தில் நடித்திருக்கிறார். 

இந்திய சினிமாவின் லெஜெண்ட்  நடிகை ஸ்ரீ தேவி, சென்ற வருடம் மர்மமான முறையில், குளியல் தொட்டியில் இறந்து கிடந்தார். அவரது மரணம் ஒரு கொலை எனவும் பலரால் குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அது ஒரு விபத்து எனக்கூறி, அந்த சம்பவம் மர்மங்களோடு பூட்டு போடப்பட்டது. 


இந்நிலையில், ப்ரியா பிரகாஷ் வாரியர் நாயகியாக நடித்திருக்கும் தனது முதல் பாலிவுட் படமான 'ஸ்ரீதேவி பங்களா', அந்த மர்மங்களை மீண்டும் தூசி தட்டுவதை போல அமைந்துள்ளது.

பிரசாந்த் மம்புள்ளி என்பவரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள ஸ்ரீதேவியின் வாழ்க்கையோடு ஒத்துப்போவது போன்ற காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   


குறிப்பாக ஸ்ரீதேவி இறந்ததாக சொல்லப்படுவதை போலவே, இந்த படத்தின் ட்ரைலரிலும் நாயகி குளியல் தொட்டியில் இறந்து கிடக்கிறார். இதனை பார்த்து மனமுடைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், இயக்குனருக்கு நோட்டிஸ் அனுப்ப, 'இயக்குனரோ ஸ்ரீதேவிக்கும்  இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை. வேண்டுமானால் படத்தை போட்டுக் காட்ட தயார்' என பதில் அளித்து இருக்கிறார்.

இப்படி பிரச்னை வரும் என்றே தெரிந்தும், 'நாயகியின் பெயர் ஸ்ரீ தேவி, அவர் ஒரு நடிகை, குடிப்பார், புகைப்பிடிப்பார், குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார்' என வாண்டட் ஆக வந்த சர்ச்சையை கிளப்பும்படி படம் எடுத்திருப்பது, அவற்றை தங்களுக்கு விளம்பரமாக்கி கொள்ளும் திரையுலகினரின் சீப்பான யுக்தி எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.